சர்வதேச ரீதியில் அரசியல் இலாபத்தினை இலக்காகக் கொண்டே தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
உள்நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக வருமாறு தமிழ்த் தேசியக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனப்பூர்வமாக அழைத்துள்ள போதிலும், அதனை அந்த அந்தக் கட்சி நிராகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு யோசனைகளை முன்வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு நம்பகத்தன்மையற்றது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு அரசியலமைப்பின் 13ஆம் திருத்த சட்டத்தைப் பற்றி மட்டுமே ஆராயும் நோக்கம் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கருதுவது சிறுபிள்ளைத் தனமானது. வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த சந்தர்ப்பத்தில், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to அரசியல் இலாபத்தினை இலக்காகக் கொண்டே த.தே.கூ செயற்படுகிறது: இலங்கை அரசாங்கம்