கிளிநொச்சியில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட
இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரனை உடனடியாக
விடுதலை செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு
(Committee to Protect Journalists) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் எந்தவொரு விடயத்தையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து வந்த போதிலும், ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வருவதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் பணிப்பாளர் ஜோயல் ஷிமோன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் எந்தவித அச்சுறுத்தல்களும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதனிடையே, ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் இன்னமும் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரின் விசாரணைக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளார்.

0 Responses to மகா தமிழ் பிரபாகரனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு