உத்திரப் பிரதேசத்தில் உள்ள தமது சொந்த ஊரில் இருந்து மெட்ரோ ரயிலில்
பயணித்து, டெல்லி முதல்வர் பதவியை ராம்லீலா மைதானத்தில் ஏற்றுக் கொண்டார்.
தானும் தனது அமைச்சர்களும் டெல்லிக்கு வரும் வழியில் தமக்காக போக்குவரத்து இடையூறு ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும், பொதுமக்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படக் கூடாது எனவும் வலியுறுத்தி அர்விந்த் கேஜ்ரிவால் இந்த முடிவை எடுத்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் இன்று டெல்லி முதல்வராக பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால். இந்த பதவி ஏற்பு விழா அவரது விருப்பப்படி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. அங்கு பாதுகாப்புக்கு 2 ஆயிரம் போலீசார் குவிக்கப் பட்டு உள்ளனர்.
டெல்லியின் 7 வது முதல்வராக கெஜ்ரிவால் பதவி ஏற்றார். சுமார் இரண்டு லட்சம் ராம்லீலா மைதானத்தில் இப்பதவியேற்பு விழாவைக் காணக் கூடினர். இப்படி பொதுமக்கள் முன்னிலையில் திறந்த வெளி மைதானம் ஒன்றில் ஒருவர் முதலமைச்சராக முடிசூடுவது இது இரண்டாவது முறை. முன்னர் 1996ம் ஆண்டு பாஜகவின் சாஹிப் சிங் வர்மா சட்ராசல் மைதானத்தில் இவ்வாறு பதவியேற்றிருந்தார்.
தற்போது கேஜ்ரிவாலுக்கு லெப்டினெண்ட் ஆளுனர் நஜீப் ஜுங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அர்விந்த் கேஜ்ரிவாலுடன் ஆறு ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களும் பதவியேற்றனர்.
பதவியேற்றதுமே அர்விந்த் கேஜ்ரிவால் மிகப்பெரிய சவால் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறார். கிலோவுக்கு ரூ 4.50 படி எரிபொருள் விலையேற்றத்தை திடீரென மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அமலுக்கு வந்தால் எதிர்வரும் ஜனவரி 7ம் திகதி முதல் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப் போவதாக சுமார் ஒரு லட்சம் வரையிலான டெல்லி ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் அறிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் வெற்றி பெற்றது ஆட்டோ ஓட்டுனர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பதவியேற்பின் போது 'வேலை நிறுத்தத்திற்கு செல்லாதீர்கள். எனக்கு இரு நாட்கள் தாருங்கள். விலையேற்றம் தவிர்க்க முடியாதது எனில் நேர்மையான விலையேற்றம் கண்டிப்பாக இருக்கும், எனக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இக்காலப்பகுதிக்குள் விலையேற்றப்படுகிறது, இதனை தவிர்க்க முடியுமானவரை முயற்சிக்கிறேன்' என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு தேர்தல் வாக்குறுதிகளின் போது ஆம் ஆத்மி கட்சி கொடுத்த மேலும் இரண்டு வாக்குறுதிகள் நடைமுறையில் இலகுவாக அமல்படுத்த முடியாதவை என்கின்றனர் அரசியல் அவதானிகள். ஒன்று இலவச தன்ணீர். மற்றையது மின்சாரக் கட்டணத்தை குறைத்தல்.
டெல்லியில் ஒவ்வொரு வீட்டுக்கும் 700 லீற்றர் நீர் இலவசமாக கொடுத்தல் என்பது கடினமான காரியம் தான். இதற்கு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு தேவை என ஆம் ஆத்மி கட்சியின் தண்ணீர் பிரிவுக்கான ஆலோசகர் சஞ்சேய் ஷர்மா தெரிவித்துள்ளார்.
கட்சி தொடங்கி 14 மாதங்களுக்குள் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 70 தொகுதிகளில் 28 சீட்டுக்களை கைப்பற்றி ஆட்சிக்கு வந்துள்ள ஆம் ஆத்மி கட்சி, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுமா அல்லது வழமை போன்று பதவியேற்றதன் பின்னர் அரசியல் வாதிகள் அடிக்கும் திடீர் பல்டி போன்று தலைமைக்கு வந்த பின்னர் தான் தெரிகிறது. நடைமுறைக்கு அது சாத்தியமில்லை எனக் கூறுமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அர்விந்த் கேஜ்ரிவால் தனது பதவியேற்பின் போது ஆபிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கும் தனது அஞ்சலியை செலுத்தினார். அர்விந்த் கேஜ்ரிவால் சிறந்த சேவையை செய்வார் என தனக்கு நம்பிக்கை இருப்பதாக அன்னா ஹசாரே கூறினார். காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், முதல்வராகியுள்ள அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் நிலையான அரசொன்றை டெல்லியில் கொண்டு நடத்துவார்கள் என நம்புவதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கேஜ்ரிவால் தனது உரையில், 'நாங்கள் நேர்மையான, தூய்மையான அரசியல் மூலம் ஆட்சிக்கு வந்துள்ளோம். இது அதிசயப் புரட்சி. கடவுளுக்கு நன்றி. அன்னா ஹசாரே அரசியல் என்றவகையில் எம் அனைவரையுமே எதிர்க்கிறார். காரணம் அரசியல் மிக மாசுபட்டது என்பது அவரது எண்ணம். நாம் அதை தூய்மையாக்கவே இங்குவந்துள்ளோம் என்றார் அர்விந்த் கேஜ்ரிவால்.
டெல்லியில் முதல்வராக பதவியேற்கும் மிக இள வயது நபரும் கேஜ்ரிவால் தான். 1968ம் ஆண்டு பிறந்த கேஜ்ரிவாலுக்கு தற்போது தான் 45 வயதாகிறது. அதோடு அரசியலில் பிரவேசித்து மிக வேகமாக ஒரு மாநில முதல்வரான ஒரு சில அரசியல் வாதிகளில் அர்விந்த் கேஜ்ரிவாலும் ஒருவர்.

0 Responses to 'நேர்மையான வழியில் அரசியலில் வெற்றிபெறலாம் என நிரூபித்துள்ளோம்' : டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்