Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் 29.01.2014 அன்று (Maanweg 174 Den Haag) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடை பயணமானது நேற்றுக் காலை மூன்றாவது நாளாக 35km தூரத்தை கடந்து பிரேடா (Breda) நகரத்தை வைந்தடைந்தது.

நடைபயணத்தில் ஈடுப்பட்டுள்ள உறவுகள் நெதர்லாண்ட் நாட்டில் வாழ்கின்ற தமிழ் உறவுகளை சந்தித்து தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து கலந்துரையாடினார்கள். இச்சந்திப்பில் தமிழ் இளையோர்களும் உணர்வுப்பூர்வமாக கலந்துக் கொண்டார்கள்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த திரு சுரி, பிரித்தானியாவைச் சேர்ந்த திரு சிவந்தன், யேர்மனியைச் சேர்ந்த திரு செந்தில்குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு வித்தியானந்தன் ஆகியோர் கடும் குளிர் காற்று எனக் காலநிலை சீராக இல்லாத சூழ்நிலையிலும் மாவீரர்களினதும் மக்களினதும் நினைவுகளை மனத்தில் பதித்து உறுதியோடு நடந்து வருகின்றனர்.

தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நான்காவது நாளாக ஆரம்பமாகவிருக்கின்ற நடைபயணமானது 12:00 மணியளவில் பெல்ஜீயம் நாட்டின் எல்லையை வந்தடையவுள்ளார்கள் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to தமிழீழ இலட்சியத்துடன் 3ம் நாளாக ஐ.நா. நோக்கி தொடருகின்ற நீதிக்கான நடை பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com