Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெல்சன் மண்டேலாவுக்கு வைக்கப்பட்டுள்ள சிலையில், அதை உருவாக்கிய சிற்பிகள் தமது படைப்பு என்பதை குறிக்கும் வகையில், அச்சிலையின் காதில் மறைத்து வைத்திருந்த ஒரு பித்தளை முயலை நீக்குமாறு, தென்னாப்ரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சிலையின் வலது காதில் வைக்கப்பட்டுள்ள குட்டி முயல்

அந்தச் சிலையின் கௌரவத்தை பேணும் வகையில், எவ்வளவு விரைவாக சிற்பிகள் தாங்கள் வைத்த அந்த முயலை நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்ய வேண்டும் என்று தென்னாப்ரிக்க அரசின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மண்டேலாவின் அந்தச் சிலையில் தங்களது பெயர்களையும் கையெழுத்தையும் பொறிக்க அதிகாரிகள் மறுத்த காரணத்தாலேயே, அந்த முயலை சிலையில் தாங்கள் சேர்த்ததாக சிலையை வடிவமைத்த சிற்பிகள் கூறுகிறார்கள்.

ஆனால் அவர்களின் கூற்றை தென் ஆப்ரிக்க அரசின் பேச்சாளர் மறுத்துள்ளார். தங்களது பெயரையோ அல்லது கையெழுத்தையோ பொறிக்க அந்தச் சிற்பிகள் அனுமதி கோரி விண்ணப்பிக்காத போது, அரசு அதற்கு மறுத்தது என்று கூறுவது சரியல்ல என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

படைப்பின் அடையாளம்?


இந்தச் சிலை பிரிட்டோரியாவிலுள்ள யூனியன் கட்டிடத்துக்கு எதிரே வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் விரைவாக அந்தச் சிலைய தாங்கள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தங்களை அவசரப்படுத்தியதும் பித்தளை முயல் சிலையில் பொருத்தப்பட்டதற்கு ஒரு காரணம் என்றும் அந்தச் சிற்பிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்ரிக்கான்ஸ் மொழியில் முயல் என்றால் 'விரைவாக' என்று பொருள்.

மிகவும் பிரும்மாண்டமான அந்தச் சிலையின் காதில் தங்களது படைப்பின் அடையாளமாக ஒரு சிறு முயலை வைத்தது, எந்த வகையிலும் அந்தச் சிலையின் மேன்மையை குறைக்கவில்லை என்று அதை உருவாக்கிய சிற்பிகள் கூறுகிறார்கள்.

அந்தச் சிறிய பித்தளை முயல் மண்டேலாவின் அந்தச் சிலையின் வலது காதில் வைக்கப்பட்டுள்ளது. அதை தொலைநோக்கி கொண்டோ அல்லது அதிநவீன கேமராவைக் கொண்டே பார்க்க முடியும்.

மண்டேலா சிலையின் காதிலிருந்து அந்தப் பித்தளை முயலை அகற்றுவது குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போது நடைபெற்று

நன்றி : பிபிசி

0 Responses to 'நெல்சன் மண்டேலாவின் காதில் முயல்' : பழிதீர்த்துக் கொண்ட சிற்பிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com