திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப் பட்டு உள்ளார் என்று, சற்று முன்னர் அதிகாரப் பூர்வத் தகவல் வெளியாகி உள்ளது.
தேமுதிகவுடன், திமுக கூட்டணி குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி அளித்து இருந்த நேர்காணலில் இருந்து, மீண்டும் திமுகவுக்கும் அழகிரிக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து கொண்டு இருந்தது.
வெளிநாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பி இருந்த மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மிகவும் காட்டமாக அழகிரி பேசியதாகவும், அதன் பின்னர் கோபால புரம் இல்லத்துக்கு கழக பொது செயலாளர் அன்பழகனும், கழகப் பொருளாளர் ஸ்டாலினும் வந்ததாகவும் கூறப்படுகிறது. அன்பழகன், ஸ்டாலின் இருவரும் திமுக தலைவருடன் சுமார் ஒரு மணி நேரம் விவாதித்து விட்டு வெளியில் வந்த நிலையில், அன்பழகன் மு.க.அழகிரி தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப் பட்டு உள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இதற்கு காரணம் கூறுகையில் மதுரை மாவட்டத்தில் கழக பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, துரோகிகள் மீது எடுத்த நடவடிக்கையை விமரிசித்து குழப்பம் விளைவிக்க முயன்றது போன்ற காரணங்களால் மு.க.அழகிரி கட்சியில் நீடித்தால் கட்சியின் கட்டுப்பாட்டை சீர்குலைத்து விடும் என்பதால் இந்த நடவடிக்கை என்றும், அழகிரி மீண்டும் கட்சியில் நீடிப்பது சரியல்ல என்றும் கூறியுள்ளார் அன்பழகன்.

0 Responses to திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிக நீக்கம்!: அன்பழகன் அறிவிப்பு!