Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா,  மோடி பிரதமரானால் தேசிய மாநாட்டு கட்சி ஆதரிக்கும் என்று  கூறியுள்ளார். 

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, காஷ்மீரில் ஆட்சி செய்து வருகிறார். சமீப காலமாக உமர் அப்துல்லாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே  கருத்து வேறுபாடு முற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரை சமாதானப் படுத்தும் முயற்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள் முயன்றும் உமர் அப்துல்லா சமாதானம் ஆகவில்லை என்றும் தெரிய வருகிறது.

இந்நிலையில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக உமர் அப்துல்லா மோடி பிரதமரானால் தேசிய மாநாட்டு  கட்சி அதை ஆதரிக்குமே  தவிர எதிர்க்காது என்று கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் மற்றும் உமர் அப்துல்லாவுக்கு இடையே கருத்து மோதல் வலுக்கிறது என்றும், வரவிருக்கும் மக்களவை மற்றும் காஷ்மீர் மாநில  சட்டபேரவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்பதை உணர்த்துவதுமாகவே உமர் அப்துல்லாவின் இந்த பேச்சு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

0 Responses to மோடி பிரதமரானால் தேசிய மாநாட்டு கட்சி ஆதரிக்கும்: உமர் அப்துல்லா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com