தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்னமும் மவுனமாக இருப்பது சரியல்ல என்று காந்தி மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்து இருக்கிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் மக்கள் முன் வைக்கப் படுவது இரண்டு விஷயங்கள்தான் என்றும், அதில் ஒன்று பிரதமராக மோடி இருப்பது, அல்லது பிரதமராக ராகுல் இருப்பது. மதிமுகவுடன் பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி விட்ட நிலையில், என்னை அந்த கட்சி அழைக்கிறது, இந்த கட்சி அழைக்கிறது என்று விஜயகாந்த் பேசிக் கொண்டு இருப்பது வீண் பெருமை.
இரண்டு கழக கட்சிகளுக்கு எதிராக அவர் முகம் காட்டியதால்தான் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். திமுகவுடன் அவர் கூட்டணி வைத்தால் ஊழலுக்கு எதிராக அவர் குரல் கொடுக்கும் தகுதியை இழந்து விடுவார். எனவே, காலம் கடந்து கொண்டு இருக்கும் நிலையில், விஜயகாந்த் இனியும் மவுனமாக இல்லாமல் பாஜகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Responses to இன்னமும் விஜயகாந்த் மவுனமாக இருப்பது சரியல்ல!: தமிழருவி மணியன்