Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தக் கோரி ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி டெசோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ ஆதரவு அமைப்பான டெசோவின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும், இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தக் கோரி இந்தியாவும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வடக்கு மாகாண கவுன்சிலுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை என்று மத்திய அரசு மனுத் தாக்கல் செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வர டெசோ வலியுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com