Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டுப்பற்றாளர் ராஜன் அவர்களின் இறுதி நிகழ்வு ஒஸ்லோவில் 30.01.2014 நடைபெற்றது. செயற்பாட்டாளர் திரு நடராஜா நவரட்ணராஜா அவர்கள், 1986 ஆம் ஆண்டு தொடக்கம் துரண்யம் நகரில் இருந்து தமிழீழ விடுதலைக்காகவும், துரண்யம் வாழ் தமிழீழ மக்களுக்காகவும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவில் சேர்ந்து அயராது செயற்பட்டு வந்தவர்.

2002 ஆம் ஆண்டு துரண்யம் நகரில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தினை ஆரம்பிக்க உழைத்து, பின் இரண்டு வருடங்கள் வளாகத்தின் பொறுப்பாளராகவும் திறம்பட பணியாற்றியவர்.

2005 ஆம் ஆண்டிலிருந்து ஒஸ்லோ நகரிலும் தேசவிடுதலைக்கான பணியை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளாரக தொடர்ந்து பணியாற்றி வந்தவர். 2009ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழ்த்தேசம் சந்தித்த பேரழிவின் பின்னரும் கொடும் நோய் அவரது இயங்கு திறனை குறைக்கும் வரைக்கும் தமது கடமையைத் தொடர்ந்து செய்து வந்தவர். திரு. நடராஜா நவரட்ணராஜா அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் எனக் கௌரவம் வழங்கி, இத்துயரிலும் பங்குகொள்கின்றோம்.


0 Responses to நோர்வேயில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் ராஜன் அவர்களின் இறுதி நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com