வாள்கள் மற்றும் இலங்கை இராணுவச் சீருடையுடன் இருந்த நால்வரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து இயங்கும் கும்பல்களை சேர்ந்தவர்களாக இருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
யாழ்.நகரினை அண்டிய தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வைத்து நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்படடுள்ளனர் .கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 4 வாள்களும் ஒரு தொகுதி இராணுவச் சீருடையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கைப்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நான்கு பேரும் தற்போது பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கும் யாழில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே போன்று இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவுடன் சேர்ந்து இயங்கிய ஆவா குழுவினர் பெரும்பிரச்சாரங்களுடன் கைது செய்யப்பட்ட போதும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கை இராணுவ சீருடையுடன் நால்வர் கைது! யாழில் மற்றொரு கும்பல் அகப்பட்டது!!