Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் மணிப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முனிர்கா பகுதியில் மணிப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறாள். நேற்று முன் தினம் இரவு அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற கீதாவை அவர் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகன் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளா.

இதையடுத்து மூர்ச்சை இழந்த குறித்த மணிப்பூர் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தை கேள்விப் பட்டதும் டெல்லியில் படிக்கும் மணிப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்து வசந்த் விகார் காவல் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதோடு வடக்கு கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கி போலிஸார் உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை எனவும் கோஷம் எழுப்பினர்.

இதனால் போலிஸாருக்கும் - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் வாகனப் போக்குவரத்தும் ஸ்தம்பிதமானது. இதையடுத்து காவல்துறையினர் குற்றவாளிக்கு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுப்போம் என உறுதி அளித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

டெல்லியில் ஏற்கனவே வடக்கு கிழக்கு மாநில மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. அருணாச்சால காங்கிரஸ் எம்.எல்.ஏ மகன் அண்மையில் கொல்லப்பட்டார். அதோடு மணிப்பாரை சேர்ந்த இரு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில் இப்போது மணிப்பூரை சேர்ந்த 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

0 Responses to மணிப்பூர் மாணவி டெல்லியில் பாலியல் பலாத்காரம் - மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com