நீண்ட காலமாக வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில், புனர்வாழ்வு பெற விரும்புகிறவர்களிடமிருந்து கடிதங்கள் கோரப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று சிறைச்சாலைத் தகவல்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் புனர்வாழ்வு பெற விரும்புகிறவர்கள் இருப்பின் கடிதங்களை வழங்கலாம் என்று சிறைச்சாலை அத்தியேட்சகர் கோரியதாகவும், அதனடிப்படையில் அரசியல் கைதிகள் பலரும் கடிதங்களை வழங்கியதாக தெரிகிறது.
மகசின் சிறைச்சாலையில் சுமார் 120 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நாட்டில் பல பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டும்- சுமத்தப்படாமலும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் அல்லது விசாரணைகளை துரிதப்படுத்தி சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.
அத்தோடு, தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தமக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதங்களையும் அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறான நிலையில் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் அரசியல் கைதிகள் தாமாக விரும்பினால், அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கலாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to புனர்வாழ்வு பெற விரும்பும் தமிழ் அரசியல் கைதிகளிடமிருந்து கடிதங்கள் கோரப்படுகின்றன