சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் (ICC) இன் முதலாவது சேர்மென்னாக, பிசிசிஐ இன் தலைவர் என்.சிறீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று சிங்கப்பூரில் நடந்த ஐசிசி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஐசிசியின் ஆளுமை நிர்வாகம், போட்டிகள், நிதி நிர்வாகம் தொடர்பில் புதிய கட்டமைப்புக்களை உருவாக்கவும் இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) ஐயின் தலைவரகாவும் இருக்கும் என்.சிறீனிவாசன் இந்தியன்ஸ் சீமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். அண்மைக்காலங்களில் மேட்ச் ஃபிக்ஸிங், மற்றும் செல்வாக்கு துஷ்பிரயோகம் என்பவற்றில் சிறீனிவாசனின் நெருங்கியவர்களின் பெயர்கள் தொடர்ந்து அடிபட்டதால் சிறீனிவாசன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.
தற்காலிகமாக பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்த அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை விசாரணைக் குழு அறிவிப்பின் பின்னர் மீண்டும் தலைவர் ஆகியிருந்தார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் நடந்த ஐசிசி கூட்டத்தில் ஐசிசிக்கு ஒரு சேர்மென்னை உருவாக்கும் முயற்சிக்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அங்கத்தவர்கள் என்.சிறீனிவாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பை பகிஷ்கரித்தனர். ஆனால் 10 இல் 8 அங்கத்தவர்களின் முழுமையான ஆதரவின் கீழ் என்.சிறீனிவாசன் புதிய சேர்மென்னாக பதவியேற்கவுள்ளார்.
அவர் தொடர்ந்து இரு வருடங்களுக்கு இப்பதவியில் நீடிக்கவுள்ளார். கிரிக்கெட்டில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே நிதி நடவடிக்கைகள் சார்பில் தொடர்ந்து ஆளுமை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது என்.சிறீனிவாசன் ஐசிசியின் சேர்மென்னாக ஆகியிருப்பது இந்தியா ஐசிசியில் தனது அதிக ஈடுபாட்டை சுதந்திரமாக காண்பிக்க வாய்ப்பாக அமையும்.

0 Responses to ஐசிசியின் தலைவராக என்.சிறீனிவாசன் நியமனம்!