மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கும், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே வேறுபாடுகள் எதுவும் கிடையாது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
தேர்தல்களில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பது சரியல்ல. ஏனெனில், அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே மாதிரியானவையே என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
பாணத்துறையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவத்தில் மாற்றங்களை செய்து கொண்டு மக்களுக்காக இயங்குகிறது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ரணில் விக்ரமசிங்கவே நீண்டகாலமாகவே தலைவராக இருக்கிறார். தேர்தல்களில் தோல்வியடைந்தாலும் அவர் தலைமைப்பதவியை விட்டுக் கொடுக்க மாட்டார். அப்படிப்பட்ட கட்சியினால் மக்களைக் காப்பாற்ற முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அரசாங்கத்திற்கும், ஐ.தே.க.வுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை - ஜே.வி.பி