Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி லெப்டினன் ஆளுனர் நஜீப் ஜுங்குடன் லோக்பால் மசோதா விடயத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு முரண்பாடு இருந்த போதும்,  ஜங்க் ஒரு நல்ல மனிதர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

அவருடன் எந்தவொரு மோதலும் எனக்கு இல்லை. அவரை மிகவும் மதிக்கிறேன், அவருடன் எனக்கு எப்போதும் நல்லுறவு தொடரும் என நான் நினைக்கிறேன் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஜங்கிற்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் அரசும் உள்துறை அமைச்சும் வேண்டுமென்றே ஜான் லோக்பா மசோதாவை தாமதப்படுத்த முனைகிறது. அவர்களிடமிருந்து அரசியலமைப்பை பாதுகாக்குமாறு கோரியிருந்தார்.

இந்நிலையிம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆஷுடோஷ் என்பவர் ஜங் காங்கிரஸின் ஏஜெண்டாக செயற்படுவதாக கூறியிருந்தார். இதை எதிர்த்துள்ள அர்விந்த் கேஜ்ரிவால், தமது கட்சித் தலைவர்கள் வார்த்தைகளை உதிர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கோபமாக இருக்கலாம். ஆனால் எவ்வாறான வார்த்தைகளை பிரயோக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனக்  கூறியுள்ளார்.

எனினும், ஆளுனர் அலுவலக்துடன் நாம் மேற்கொள்ளும் தனிப்பட்ட தொடர்புகளை யாரோ ஊடகங்களுக்கு கசிய விடுகிறார்கள். அண்மையில் பெண்களுக்கான டெல்லி கமிஷனின் சேர்பேர்சனை நீக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். இதையை ஆளுனர் அலுவலகம் நிராகரித்துவிடும் என முன்கூட்டியே ஒரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. அதே போன்றே ஆளுனர் அலுவலகம் எமது கோரிக்கையை பின்னர் நிராகரித்திருந்தது என்றார்.

0 Responses to டெல்லி ஆளுனர் நஜீப் ஜுங்குடன் எனக்கு எந்த மோதலும் இல்லை : அர்விந்த் கேஜ்ரிவால்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com