Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு ரஷ்யாவில் ஷகலின் தீவில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். துப்பாகி தாரி என சந்தேகிக்கப்படுபவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

25 வயதான இவர், பாதுகாப்பு துறை அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்தவர் என தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் ஒரு கன்னியாஸ்திரி ஒருவரும் தேவாலயப் பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இது போன்று ரஷ்யாவில் பல்வேறு நகரங்களில் அண்மைக்காலமாக  தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பெருகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to கிழக்கு ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com