மேஷம்
வளர்ச்சி கூடும் நாள். சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
நட்பு வட்டம் விரியும் நாள். அன்னிய தேசப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். மங்கையரால் ஏற்பட்ட மனக்கலக்கம் மாறும். எதிரிகள் உதிரியாவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுனம்
சொத்துக்களால் லாபம் கிட்டும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கடகம்
வெற்றி கிட்டும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு உறவினர்கள் ஒத்துழைப்புச் செய்வர். குடும்பத்தில் மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும்.
சிம்மம்
பாசத்தோடு பழகியவர்களின் எண்ணிக்கை கூடும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடி அகலும்.
கன்னி
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. கடல் தாண்டி வரும் செய்திகளால் மகிழ்ச்சியடைவீர்கள். உடன் பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். விருந்தினர்களின் வருகையால் வியப்படையும் நாள். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
விருச்சகம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். இல்லத்தில் சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொது வாழ்வில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும்.
தனுசு
சேமிப்பு உயரும் நாள். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
மகரம்
தொழில் வளர்ச்சிக்கான சந்தர்ப்பம் கூடி வரும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். தாய்வழி அனுகூலம் கிட்டும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்
தடைகள் அகன்று தனலாபம் பெருகும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியமொன்று இன்று நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.
மீனம்
வழிபாட்டினால் வளர்ச்சி காண வேண்டிய நாள். கடன்சுமை அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளிடம் அதிக விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. சொத்துப் பிரச்சினை தலைதூக்கலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
வார ராசி பலன்கள் | 17-03-2014 முதல் 23-03-2014 வரை
வார எண் ஜோதிடம் | 17-03-2014 முதல் 23-03-2014 வரை
0 Responses to இன்றைய ராசி பலன் | 19.03.2014