Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்ணான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் இன்று புதன்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ருக்கி பெர்ணான்டோவையும், அருட்தந்தை பிரவீன் மகேசனையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியளவில் கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, இன்று அதிகாலை குற்றச்சாட்டுக்கள் ஏதும் முன்வைக்கப்படாமல், அவர்கள் இருவரையும் விடுவித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், கிளிநொச்சியில் வைத்து ஜெயகுமாரி என்கிற தாயும், அவரது மகளும் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன் பின்னரே இரண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இரு விடங்களும் சர்வதேச ரீதியில் கவனம் பெற்றிருந்தது. பல நாடுகள் இலங்கையின் கைது நடவடிக்கைகளை கண்டித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதனிடையே, “என்னுடையதும், அருட்தந்தை பிரவீன் மகேசனுடையதும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. எங்களைப் போன்று உதவி தேவைப்படுவோருக்கு தொடர்ந்து உதவிடுவோம்” என்று விடுதலையான ருக்கி பெர்ணான்டோ தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

0 Responses to கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரும் விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com