Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றிருந்தாலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு லண்டன் பயணம் என்பது சிக்கலானதாகவே மாறியுள்ளது போலத் தோன்றுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொமன்வெல்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

இதங்கு உலகின் ஒருபக்கத்தில் எதிர்ப்புகள் கிளம்பினாலும், இலங்கை தலைமைப் பொறுப்புக்கு வருவதையிட்டு, பிரித்தானியா எந்த எதிர்ப்பையும் தெரிவித்திருக்கவில்லை.

ஆனாலும் கடந்த 10ம் திகதி லண்டனில் நடந்த கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை.

கொமன்வெல்த தினத்தை மின்னிட்டு லண்டனில் உள்ள வெஸ்ட்மிஜனிஸ்டர் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டதுடன், கொமன்வெல்த தலைமையகம் அமைந்துள்ள மல்பரோ ஹவுஸில் கொமன்வெல்த செயலர் கமலேஸ் சர்மாவின் வரவேற்பு உபசார நிகழ்வும் இடம்பெற்றது.

இவை இரண்டிலும் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்துடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இணைந்து பங்கேற்பார் என்று கொமன்வெல்த் செயலகம் அறிவித்திருந்தது.

ஆனால் காரணம் ஏதும் கூறப்படாமல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயணம் கைவிடப்பட்ட அதேவேளை, அவரது பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்த நிகழ்வுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

முன்னதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லண்டன் வருவதானால் அவருக்கு பிரித்தானியா பாதுகாப்பு வழங்கும் என்றும், அதேவேளை, அவருக்கு எதிராக ஜனநாயக ரீதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டால் அதைத் தடுக்கமாட்டோம் என்றும் பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு லண்டன் பயணம் என்பது சிக்கல் மிக்க ஒன்றாகவே இப்போது மாறிவிட்டது.

புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு மட்டுமன்றி, பிரித்தானிய அரசின் அணுகுமுறையும் கூட இலங்கை அரசினால் வரவேற்கப்படும் ஒன்றாக இருக்கவில்லை.

போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட முறையில் லண்டனுக்கு மேற்கொண்ட பயணங்களின் போது கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிட்டது.

புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்களால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தவிருந்த உரையை ஏற்பாட்டாளர்களே ரத்துச் செய்த போது தொடங்கிய தலைவலி இன்று வரை தீரவில்லை.

அதற்குப் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வ பயணத்தின் போதும் சரி, தனிப்பட்ட பயணங்களின் போதும் சரி, நிம்மதியாகப் பயணங்களைத் தொடர முடியாமல் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் இடம்பெற்றன.

பிரித்தானிய மகாராணி முடிசூட்டப்பட்ட வைரவிழா கொண்டாட்டங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லண்டன் சென்றிருந்து போதும் கூட, லண்டன் நகரில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஹீத்ரோ விமானநிலையத்தில் தரையிறங்கியது தொடக்கம் அங்கிருந்து புறப்படும் வரை எதையும் திட்டமிட்டவாறு செய்யமுடியாதளவுக்கு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் சில சந்தர்ப்பங்களில் பயணத் திட்டங்களை கைவிட்டும், மாற்றியமைத்தும் கொள்ள வேண்டிய நிலை கூட ஏற்பட்டதுண்டு.

கடந்த 10ம் திகதி கொமன்வெல்த் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முக்கியமாகப் பங்கேற்க வேண்டிய ஒருவராக இருந்தாலும், அவர் அந்“தப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. கொமன்வெல்த அமைப்பின் தலைவர் என்ற வகையில் மகாராணிக்கு அடுத்த கௌரவம் அவருக்கே அளிக்கப்பட வேண்டியிருந்தது.

ஆனால் எதற்காக கொமன்வெல்த் தின நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை என்ற காரணத்தையும் கூறவில்லை.

பிரித்தானியா தொடர்பாக கொண்டுள்ள வருத்தம், புலம்பெயர் தமிழர்களின் போராட்டம், சனல் 4 நெருக்கடி, ஜெனிவா தீர்மானம் என்று பலபக்க நெருக்கடிகளின் விளைவாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் லண்டன் பயணம் கைகூடாமல் போனதாகத் தெரிகிறது.

அதேவேளை, இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொமன்வெல்த் தினத்தை முன்னிட்டு கனடா, தென்னாபிரிக்கா, சிசேல்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் செய்திகளை வெளியிட்டிருந்தனர்.

ஆனால் கொமன்வெல்த் அமைப்பின் தலைவராக இருந்து போதிரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து ஒரு வாழ்த்துச் செய்தியாவது வெளியிடப்படவில்லை. இது திட்டமிட்டே தவிர்க்கப்பட்டதா அல்லது தவறவிடப்பட்டதா என்று தெரியவில்லை.

பெரும் போராட்டத்துக்குப் பின்னர் கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்தி தலைமைப் பதவியைப் பெற்றுக்கொண்ட போதிலும், தற்போது அவருக்கு அதில் ஈடுபாடு இல்லையோ என்ற கேள்வி எழுகிறது.

கொமன்வெல்த தலைமைப் பொறுப்பை ஏற்ற ஒரே மாதத்தில் கென்யாவில் நடந்த சுதந்திரப் பொன்விழா நிகழ்வுக்கு கொமன்வெல்த தலைவர் என்ற முறையில் சிப்பு அழைப்பாளராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சென்றிருந்தார்.

ஆனால் அதே கொமன்வெல்த் அமைப்பின் தொடக்க நாள் நிகழ்வுகளில் இருந்து அவரே ஒதுங்கிக் கொண்டார்.

கொமன்வெல்த் தலைவராக இருந்தாலும், சிக்கலின்றி லண்டன் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதையிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெறுப்படைந்திருக்கலாம். இத்தோடு இந்தப் பிரச்சினை ஓய்ந்து விடப் போவதில்லை.

கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இம்முறை பிரித்தானியாவின் ஒரு பகுதியாக உள்ள ஸகொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் யூலை 23ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 03ம் திகதி வரை நடக்கவுள்ளது.

அதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே முதன்மை விருந்தினராகப் பங்கேற்க வேண்டும்.

ஆனால் அதற்கு ஏ்றகனவே ஸ்கொட்லாந்திலுள்ள அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்த நிகழ்வுக்கு அழைப்பது குறித்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கொமன்வெல்த நாள் நிகழ்வில் இருந்து ஒதுங்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளாஸ்கோவில் நடக்கவுள்ள கொமன்வெல்த விளையாட்டப் போட்டிகளுக்குச் செல்வாரா என்ற கேள்வி எழலாம்.

அதைணும் அவர் தவிர்த்துக் கொள்ளும் நிலை ஏற்படுமேயானால் எதற்காக கொமன்வெல்த் தலைமைப் பதவியை பெறுவதில் இலங்கை ஒற்றைக்காலில் நின்றதோ, அந்த திட்டத்தில் தோற்றுவிட்டதாகவே கருத இடமுண்டு.

வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மான வடிவம் எத்தகையதாக இருக்கும் என்பதைப் பொறுத்து லண்டன் மட்டுமன்றி மேலும் பல மேற்கு நாடுகளுக்கான பயணங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் வேறு முக்கியமான சிலருக்கும் ஒரு கனவாகக் கூட மாறிப் போகலாம்.

கபில்

0 Responses to பகல்கனவாக மாறியுள்ள மகிந்த ராஜபக்சவின் லண்டன் பயணம் – கபில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com