இலங்கையின் உள்ளக விடயங்களின் தலையிட்டு ‘எமது உள்ளக நிர்வாகப் பொறிமுறையை எவ்வாறு அமைய வேண்டும்’ என்று தீர்மானிக்கும் நோக்கிலேயே எமக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது முன்வைக்கப்படவுள்ள (அமெரிக்கத்) தீர்மானம் வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அவர்களின் எண்ணங்களை அனுமதிக்க முடியாது. ஏனெனில், இலங்கையில் மக்களினால் அமைக்கப்பட்ட அரசாங்கமே ஆட்சியிலுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை புத்திஜீவிகளுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை பொறிமுறையின் தலைமைத்துவத்தில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் (நவநீதம்பிள்ளை) இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் வரைபு தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் “வெளிப்படையான ஒருவருக்கே விசாரணைகளை முன்னெடுக்க பொறுப்பளிக்க முடியும். ஆனால், இவர் எதனைச் செய்துள்ளார்? மோதல் முடிவடைந்து ஒரு வாரத்தின் பின்னர் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என வெளிப்படையாகவே தெரிவித்தார். இவருக்குத்தான் இந்த விசாரணைப் பொறுப்பினை வழங்கியுள்ளனர். இவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பது எவ்விதத்திலும் மனித உரிமைகள் ஆணையாளரின் கடமையல்ல. அதனைச் செய்வதற்கு சட்டரீதியான உரிமையும் அவருக்குக் கிடையாது“ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடுவதே அமெரிக்கத் தீர்மானத்தின் நோக்கம்: ஜீ.எல்.பீரிஸ்