Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷிடம், “ உனக்கு சிறிதளவேனும் மூளை இருக்கிறதா?” என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கடுமையான தொனியில் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வைத்து இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

யுக்ரெயினில் இருந்து கிரைமியா பிராந்தியத்தை ரஷ்யா பிரித்து, தம்முடன் இணைத்துக் கொண்டமைக்கு, அண்மையில் ஜீ.எல்.பீரிஷ் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது ஜனாதிபதிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த அமைச்சரவை கூட்டத்தின் போது, “ உனக்கு சிறிதளவேனும் மூளை இருக்கிறதா? உண்மையில் திட்டமிட்டே நீ இலங்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறாயா? நாளை இந்தியாவும் இதேபோன்று நாட்டை பிரித்தால், அதற்கும் ஆதரவை தெரிவிப்பாயா? நீ உண்மையாகவே பேராசியரா? உனது பதவி தொடர்பில் நான் விரைவில் தீர்மானம் செய்ய வேண்டி வரும்” என்று ஜனாதிபதி, ஜீ.எல்.பீரிஷை திட்டித்தீர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to உனக்கு சிறிதளவேனும் மூளை இருக்கிறதா? பீரிஷிடம் மகிந்த கடுந்தொனியில் கேள்வி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com