Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இந்த விமானம் தென் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்தது என்பது உறுதியாகிவிட்டது. இதில் யாருமே உயிர் தப்பவில்லை  என மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நாங்கள் எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம் என மலேசியன் எயர்லைன்ஸ் இன்று திங்கட்கிழமை இரவு மலேசிய நேரப்படி 9.45 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்களை இன்று மலேசிய நேரப்படி இரவு 10 மணிக்கு சந்தித்த மலேசியப் பிரதமர் கிடைக்கப்பெறுகின்ற புதிய தகவல்களின் படி மேற்படி விமானம் இந்துமா சமுத்திரத்தின் தென்பகுதியில் காணமல் போயுள்ளது என்பதை ஆழ்ந்த கவலையோடு தெரிவிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

விமானத்துடன் தொடர்பை மேற்கொண்டு வந்த இங்கிலாந்து இம்மாசெற் செய்மதி நிறுவனத்தின் ஆய்வின் படி இந்த விமானம் கடைசியாக தொடர்பை பேணிய இடத்திற்கு அண்மையிலேயே கடலில் மறைந்துள்ளது. இவ்வாறான துல்லிய செய்மதித் தரவுகள் விசாரணைகளின் போது பயன்படுத்தப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

இறந்தவர்களின் உறவினர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கான ஏற்பாடுகளை மலேசியா செய்துள்ளதாக ஸ்கை நியூஸ் அறிவித்துள்ளது.

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விமானங்களும் கப்பல்களும் தேடிவரும் நிலையில், இந்த விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கக்கூடிய சில புதிய பொருட்கள் பார்வையில் தென்பட்டுள்ளதாக இன்று காலையில் மலேசியா கூறியுள்ளது.

ஒரு வட்டமான பொருளையும் ஒரு செவ்வகமான பொருளையும் அவுஸ்திரேலிய விமானம் ஒன்று கண்டதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பொருட்களை ஆஸ்திரேலியாவின் கடற்படைக் கப்பல் அடுத்த சில மணி நேரங்களில் ஒன்று தண்ணீரில் இருந்து எடுத்து பார்க்க முடியும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறினார்.

மலேசிய விமானத்தின் சேதமா இந்தப் பொருட்கள் என்று இன்னும் தெரியவில்லை என கென்பெர்ராவில் உள்ள நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

இந்த காலத்தின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்று குறிப்பிட்டு, அந்த மர்மத்துக்கு விடைகாணும் நெருக்கத்தில் விசாரணையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே இன்று இரவு மலேசிய பிரதமர் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இந்த விமானம் தென் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்தது என்பது உறுதியாகிவிட்டது. இதில் யாருமே உயிர் தப்பவில்லை என அறிவித்துள்ளார்.

0 Responses to விமானம் கடலிலே வீழ்ந்தது! விமானத்தில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்: மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com