Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை மீது சர்வதேச அழுத்தங்களும், கவனமும் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்தோடு, இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பாரிய பிரச்சினைகள் நிகழ்கின்றன. அந்தப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. மாறாக, மக்களை சர்வதேசத்துக்கு எதிராக திருப்பி அதனைப் பயன்படுத்தி தேர்தல்களை வெற்றி கொள்ள நினைக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே மார்ச் 29ஆம் திகதி இரண்டு மாகாணங்களின் தேர்தல்களை நடத்துகிறது என்று அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

தனது மகனை தேடிவரும் தாய் ஜெயகுமாரி பாலேந்திரன் மற்றும் அவரது மகள் ஆகியோர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டமை மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட விடயங்களையும் கண்டித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, முழு உலகமும் இலங்கை மீது கவனத்தை செலுத்தியுள்ள தருணத்தில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

வடக்கில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்யும் அநியாயங்கள் தெற்கிலும் விரைவில் பரவும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களுக்கு ‘மஹிந்த’ அரசாங்கமே பொறுப்பு: ஐ.தே.க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com