வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதன் அடிப்படையில் இன்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அனந்தி சசிதரனுக்கு எதிரான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இதில் அனந்தி இலங்கையின் சமாதானத்தை குழப்பும் வகையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது அனந்தியை எதிர்காலத்தில் கைது செய்வதற்கான ஒரு கட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அவரை ஏற்கனவே கைது செய்யவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி பின்னர் சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டின் நிமித்தம் அரசாங்க தரப்பினரால் மௌனமாக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அவரை கைது செய்வதற்கான சூழ்ச்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை இந்த சூழ்ச்சியின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய புள்ளி ஒருவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.




0 Responses to அனந்திக்கு எதிரான சூழ்ச்சி ஆரம்பம்!