Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நைஜீரியாவில் போகோ ஹாராம் தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் 276 பள்ளி மாணவிகளும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக அக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் போகோ ஹராம் குழுவின் தலைவர்களில் ஒருவரான அபுபகார் செகாவு வெளியிட்டுள்ள 17 நிமிட வீடியோ காட்சி ஒன்று, ஏ.எஃப்.பி சர்வதேச ஊடகத்திற்கு கிடைத்துள்ளது. இதில், சுமார் 130 பள்ளி மாணவிகள் முழு நீள ஹிஜாப் ஆடை அணிந்து, தொழுகைகளில் ஈடுபடுவதாக வரும் காட்சி ஒன்றும் அதைத் தொடர்ந்து போகோ ஹராம் குழுவின் தலைவரின் உரையும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், தமது போராளிகள் அனைவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் வரை இப்பள்ளி மாணவிகளை விடுவிக்கப் போவதில்லை எனவும், அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகவும் அத்தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 14ம் திகதி நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள சிபோக் எனும் நகரில் 276 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டனர். குறித்த பகுதியில் கிறிஸ்தவ சமூகத்தினர் பெரும்பாலானவர்களாக வாழ்கின்றனர். கடத்தப் பட்ட இப்பள்ளி மாணவிகள் அச்சமயத்தில் பரீட்சையை எதிர்நோக்கி இருந்தனர். கடத்தப் பட்டவர்களில் 50 மாணவிகள் எப்படியோ தப்பித்து வந்த போதும் இன்னும் 200 மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் கடத்தப் பட்ட மாணவிகளை விடுவிப்பதில் அரசு காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்பள்ளி மாணவிகளை மீட்க அமெரிக்க உள்ளிட்ட பல மேற்குலக நாடுகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மேற்குலக கல்வி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

0 Responses to நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றம்? : போகோ ஹராம் குழுவினர் தகவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com