Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இன்று டெல்லியில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதி அளித்தால், இங்குள்ள விவசாயிகள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் கடுமையாகப்  பாதிக்கப்படுவார்கள். எனவே, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு விவகாரத்தில் பாஜக ஒரே நிலைப்பாட்டுடன் உள்ளது. மேலும்,அந்நிய முதலீட்டு விவகாரத்தில் பாஜக தேர்தல் அறிக்கையின் படியே செயல்ப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதிய வர்தகத்துறை அமைச்சகம் நடைமுறையில் உள்ள அந்நிய முதலீட்டுக் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்யும் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com