இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல், தனுஷ்கோடி வரை எட்டுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை செல்போன் கோபுரங்களின் சிக்னல், தனுஷ்கோடி வரை எட்டுகிறது என்றும், இது கடத்தல் கும்பல்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றும், கடற்ப்படை வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது. இலங்கையின் செல்போன் சேவைகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைத்தப் பின்னர், அவைகள் தனுஷ்கோடி வரை மிகத் துல்லியமாக சிக்னலை தெரிவிக்கிறது என்றும் தெரிவிக்கும் கப்பற்படையினர், இதனால் கடத்தல்காரர்கள் மிக எளிதாக தப்பித்து விடுகின்றனர் என்றும் தெரிவிக்கின்றனர். காரணம் செல்போன் சிக்னல் உதவியுடன் கடற்படை நடமாட்டத்தை கொள்ளைக்காரர்கள் எளிதில் கண்டுகொண்டு தப்பி விடுகிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதனால், பல தங்கக் கடத்தல்களை பிடிக்க முடியாமல் போய்விட்டது என்று இந்திய, இலங்கை கடற்படையினர் தெரிவிக்கின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் இலங்கையிலிருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 100 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடத்தல்காரர்களிடமிருந்து பிடிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை?