சோனியாகாந்தி தலைமையில் இன்று மாலை அவரது இல்லத்தில் காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டம் நடைப்பெறவுள்ளது.பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாதம் 17ம் திகதி குடியரசுத் தலைவரிடம் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவுள்ளார்.
அதற்கு முன்னதாக நாட்டுமக்களிடம் அவர் பிரிவுரையாற்றவுள்ளார். இந்நிலையில் நேற்று பிரதமர் தமது அலுவலகத்தில், அலுவலக பணியாளர்களிடையே பிரிவுரையாற்றி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். இந்நிலையில்தான் இன்று மாலை காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டம் கூடவுள்ளது. கூட்டத்திற்குப் பின்னர் அவருக்கு மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் கை எழுத்திட்ட நினைவுப் பரிசை சோனியாகாந்தி மன்மோகன் சிங்குக்கு அளிக்கவுள்ளார்.
கூட்டம் முடிவடைந்த நிலையில் மன்மோகன் சிங்குக்கு சோனியாகாந்தி பிரிவு உபச்சார விருந்து அளிக்கவுள்ளார். இந்த விருந்து நிகழச்சியில் முக்கிய மூத்த அமைச்சர்களும் கலந்துக்கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டம்!