Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை யுத்த குற்றவாளி சவேந்திரசில்வா மீண்டும் நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான கனேடிய தூதரகத்தில் நேற்று இரவு இலங்கையின் இறுதி யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற பாலியல் கொடுமைகள் தொடர்பிலான விவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

நோர்வே, நியுசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன், இலங்கையின் யுத்த குற்றவாளி சவேந்திரசில்வாவும் இதில் இணைந்திருந்தார். 

இதில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த கால பாலியல் கொடுமைகள் தொடர்பான சிறப்பு பிரதிநிதி சானீப் பங்குரா முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டன.

எனினும் சில ஒழுங்கமைப்புகள் திட்டமிட்டு இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்றும் சவேந்திரசில்வா இதன் போது தெரிவித்துள்ளார்.

0 Responses to இறுதி யுத்தத்தின் போதான பாலியல் துஸ்பிரயோகங்களை நிரகாரித்தார் யுத்தக் குற்றவாளி சவேந்திரசில்வா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com