இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகளை நடத்தும் போது, இலங்கையில் இடம்பெற்றது தமிழின அழிப்பா அல்லது போர்க்குற்றமா என்பது தொடர்பில் தெரியவரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மோதல்களின் போது தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் போது அதனை நாம் கோருவதில் சிக்கல் உள்ளது. ஏனெனில், மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தினால் மனித உரிமைகள் தொடர்பாகத்தான் விசாரணை நடத்த முடியும். ஆணையாளரின் அலுவலகத்தினால் விசாரணை நடத்தப்படும் போது இங்கு நடந்தது என் என்பது வெளிப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மனித உரிமைப் பேரவையானது மனித உரிமைகளை மட்டும் தான் விசாரணை செய்ய முடியும். அந்தப் பேரவையின் வரைபை வரைந்தவர்கள் அவ்வாறு தான் வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர். எனவே, ஆணையாளரின் அலுவலகத்தினால் விசாரணை நடத்தப்படும் போது அதனை ஒத்த விடயங்கள் பற்றி ஆராயப்படும். இதன்போது இங்கு நடந்த வியடங்கள் வெளிப்படும். தமிழின் அழிக்கப்பட்டதா? போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமா என்பது தொடர்பாக விசாரணைகள் மூலம் தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இங்குள்ள ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதைப் போன்று எடுத்த எடுப்பில் தமிழின அழிப்புக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு நாம் கோர முடியாது. அத்தோடு மனித உரிமைப்பேரவையில் அந்தத் தீர்மானம் கொண்டுவரப்படவும் முடியாது. இதனை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்று எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழினம் அழிக்கப்பட்டதா?; ஐ.நா. மனித உரிமை பேரவை விசாரணையில் தெரியவரும்: எம்.ஏ.சுமந்திரன்