தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் ஊடகச் செய்திகளை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக 18 புலனாய்வு அதிகாரிகள், 18 நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதலொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனாலும், குறித்த செய்தியில் உண்மை ஏதும் இல்லை என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவ்வாறான எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லையென்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக புலனாய்வு அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டதாக வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தைத் தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் சரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 40வது சரத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அமைப்புகளைத் தடை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் நபர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் மற்றும் வெளிவிவகார அமைச்சின் தூதரக அதிகாரிகளும் வெளிநாடுகளுக்குச் சென்று விளக்கமளித்துள்ளனர் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to புலனாய்வு அதிகாரிகள் யாரும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவில்லை: இலங்கை பாதுகாப்பு அமைச்சு