நேற்று இரவு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் மிதமான கோடை மழை பெய்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது வெயிலின் தாக்கத்தை சற்றுக் குறைப்பதாக உள்ளதாக மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். கடலூரில் சுமார் இரண்டு மணி நேரம் மிதமான மழை பெய்ததாகவும், தேனி மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் நல்ல மழை பெய்து பூமி குளிர்ந்ததும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கிண்டி, அண்ணா சாலை, சேப்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்ததாகவும் கூறப்படுகிறது.வேலூர், ராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை ஆகிய பகுதிகள் சேலம், ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட ஊர்களிலும் லேசான மழை பெய்ததாக கூறப்படுகிறது. இது வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்ட மழை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

0 Responses to சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் !கோடை மழை!