Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கவுஹாத்தி ரயில் ஓடும்போது குண்டை வெடிக்கச் செய்ய வேண்டும் என்பதே சதிகாரர்களின் திட்டமாக இருக்கக் கூடும் என்று, விசாரணைக் குழுத் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் கவுஹாத்தி ரயிலில் வெடித்த இரட்டைக் குண்டை, கவுஹாத்தி ரயில் ஓடிக் கொண்டிருக்கையில் ஆந்திரா அருகில் வெடிக்கச் செய்வதே சதிகாரர்களின் திட்டம் என்று தெரிவித்துள்ளது விசாரணைக் குழு. அதாவது கடந்த 1ம் திகதி சென்னை சென்ட்ரல் வந்தடைந்த கவுஹாத்தி ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தது. ரயில் குறிப்பிட்ட நேரத்தில் சென்னை வந்திருந்தால் ரயில் ஆந்திரா அருகில் சென்றுக் கொண்டிருக்கும்போதே குண்டு வெடித்து ரயில்ப்பெட்டிகள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருக்கும். இதனால் பயங்கர நாசம் ஏற்பட்டிருக்கக் கூடும். இதுதான் சதிகாரர்களின் திட்டம் என்று இப்போது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக விசாரணைக் குழுத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் போலி முகவரியில் சென்னைக்கு டிக்கெட் எடுத்துள்ள ஒரு நபர் சென்னை வருவதற்குள் இறங்கி உள்ளதும் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to கவுஹாத்தி ரயில் ஓடும்போது குண்டுவெடிக்கச் செய்யவே சதிகாரர்கள் திட்டம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com