தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக் காளை விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக இளைஞர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டுக் காளைப் போட்டி விளையாட்டு நடத்தப்படும். இதில் மிகவும் புகழ் வாய்ந்த விளையாட்டு என்பது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டுத்தான். இந்த விளையாட்டு என்பது விலங்குகளைத் துன்புறுத்தி விளையாடப்படுவது என்று கூறி, இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கலானது.
இந்த மனுவின் மீதான விசாரணையில் தமிழக அரசு சார்பில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதில்லை என்று விளக்கம் கூறப்பட்டது. மேலும் தமிழக அரசு புதிய நெறிக்காட்டுதல் வழிமுறைகளைக் கூறிய போதும், இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த நிரந்தரத் தடை விதித்துள்ளது.

0 Responses to தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை!:உச்ச நீதிமன்றம்