Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீஃபை இன்று காலை தனது ஐதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

 எனினும் நேற்று பிரதமராக மோடி பதவியேற்ற தருணத்தில் எல்லையில் இரு தடவைகள் பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய எல்லைப் படையினரின் முகாம்கள் மீது, ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அத்தகவல்கள் கூறுகின்றன. நேற்று காலை  11.20 மணியளவில், பூஞ்ச்சில் நாகி தேக்ரி கிருஷ்ணா காதி செக்டர் அருகே காலை 11.20 மணிக்கும், பின்னர் மாலை 06.15 மணிக்கும் இரு தடவை ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியப் படையினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் இத்தாக்குதலில் எந்தவித உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மோடி இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப், மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம், ஆப்கான் அதிபர் அமீத் கர்சாய், பூட்டான் அதிபர் ட்ஷெரிங் டோப்கேய், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, மாலைதீவு அதிபர் அப்துல்லா யமீன் அப்துல் காயோம், நேபால் அதிபர் சுஷில் கொய்ராலா ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜும் உடனிருந்தார்,

இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா உலக அரங்கில் உச்சத்தை எட்டிவிடும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.

மேலும் இந்தியாவும் - அமெரிக்காவும் இணைந்த் செயற்பட அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும், இதன் மூலம் உலக நாடுகளையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் திறன் உருவாக்கப்படுவதாகவும் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை மோடி முன்னரே வகுத்துக் கொள்வார் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் முதற்பயணமாக ஜப்பான், சீனா அல்லது வங்கதேசத்திற்கு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 Responses to மோடி பதவியேற்ற அதே தினத்தில் எல்லையில் இரு தடவை அத்துமீறி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com