இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை புதுடில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, (இலங்கையிலுள்ள) தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் தொடரும் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் 15வது பிரதமராக நரேந்திர மோடி நேற்று திங்கட்கிழமை பதவியேற்றிருந்தார். அந்த பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட அரச குழுவோடு பங்கெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to மோடி- மஹிந்த சந்திப்பு: இருதரப்பு உறவுகள், தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு