Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கறுப்புப் பணம் பதுக்கியவர்களைக் கண்டுப்பிடித்து விசாரிக்க புதிதாக பதவியேற்றுக்கொண்ட  நரேந்திர மோடி அரசு புதிய குழுவை நியமித்துள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில்,  இன்று மாலை நடைப்பெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு நியமித்துள்ள இந்த புதிய குழுவில் வருவாய்த் துறை செயலர், சிபிஐ, ஐபி இயக்குனர்கள், அமலாக்கப்பிரிவு அதிகாரி, மத்திய நேரடி வரித்துறை தலைவர், மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின் போதே உச்ச நீதிமன்றம் சிறப்புக் குழு அமைக்க உத்தரவு அளித்துள்ளது என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to கறுப்புப் பண விவகாரம்: புதிதாக விசாரணைத் தொடங்க புதிய குழு குழு அமைத்தது மோடி அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com