Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதிமோதல்களின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இம்முறையும் அனுஷ்டிக்கப்படும். அதனை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்கத் தூண்டுவது அரசாங்கம் தான் என்று யாழ் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக் கழகமானது எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படுகின்றது என்று பதிவாளர் அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்த அறிவிப்பு தொடர்பாக எந்தவிதமான காரணங்களும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் உலகெங்கிலும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ் பல்கலைக் கழத்தில் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பல்கலைக்கழகத்திற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

பல்லாயிரக்காணக்கான தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட நாளை தமிழர்கள் எவ்வாறு எளிதில் மறந்துவிடுவார்கள். அவ்வாறு தமிழ் மக்கள் மறக்க நேரிட்டாலும், இந்த அரசாங்கம் அவர்களின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்க தூண்டும் வகையில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும்; யாரும் தடுக்க முடியாது: சிவாஜிலிங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com