Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க புலனாய்வுத் திணைக்களங்களின் அத்துமீறல்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்த முன்னால் NSA உளவாளியும் அகதியாக ரஷ்யவில் பாதுகாப்புடன் வாழ்ந்து வருபவருமானவர் எட்வர்ட் ஸ்னோவ்டென்.

இவர் தனிப்பட்ட நபர்கள் மட்டுமன்றி உலக மக்கள் அனைவருமே புலனாய்வுத் திணைக்களங்கள் மூலம் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உட்படும் அபாயத்திலேயே உள்ளனர் என்று அதிர்ச்சித் தகவலை சமீபத்தில் அளித்துள்ளார்.

இப்புலனாய்வுத் திணைக்களங்கள் எந்த ஒரு நபரினதும் தொலைபேசி அழைப்புக்கள், ஈ மெயில்கள், கோப்புக்கள், இணையத் தள தேடல் பதிவுகள் (search history) மட்டுமன்றி நீங்கள் எப்பொருளை வாங்குகின்றீர்கள், உங்கள் நண்பர்கள் யார் மற்றும் எங்கெங்கு நீங்கள் செல்கின்றீர்கள், யாரை நேசிக்கின்றீர்கள் போன்ற அனைத்து விடயங்களையும் கண்காணிக்கும் திறன் உடையவை என்பதுடன் கடந்த காலத்தில் இக்கண்காணிப்பினை மேற் கொண்டிருந்தன எனவும் ஸ்னோவ்டென் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்னொவ்டென் தனது இப்புதிய கருத்துக்களை கனடாவின் டொரோன்டோ நகரில் பொது மக்கள் கண்காணிப்பு (surveillance) தொடர்பாக நடந்த விவாதத்தின் போது குறுகிய நீளமுடைய வீடியோப் பதிவின் மூலம் தெரிவித்தார். இவ்விவாதத்தில் கலந்து கொண்ட Mr.Glenn Greenwald எனும் பத்திரிகையாளர் ஸ்னோவ்டெனின் தகவல் கசிவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய புத்தகம் கடந்த மாதம் கார்டியனின் புலிட்ஷெர் விருதை வென்றிருந்ததுடன் ஸ்னோவ்டென் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வெளியிட்ட தகவல்களும் முதன் முதலாக கடந்த ஜூன் மாதம் கார்டியன் (Guardian) பத்திரிகையிலேயே வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to உலகின் அனைத்து மக்களுமே உளவு பார்க்கப் படும் அபாயத்தில் உள்ளனர்:எட்வர்ட் ஸ்னோவ்டென்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com