Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அல்கொய்தா இயக்கத்தின் பிரதான தலைவரான அய்மான் அல்-ஷவாஹிரி ஒரு வீடியோ குறும் செய்தியில் சிரியாவில் இயங்கி வரும் அல்கொய்தா கிளை சொந்த தேசத்துக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவரது செய்தியில், 'சிரிய மக்கள் யுத்தத்தில் ஈராக்கின் அல்கொய்தா போராளிக் குழுவின் பிரவேசமானது அங்குள்ள இஸ்லாமியப் போராளிகளுக்கான ஒரு அரசியல் அனர்த்தமாகும்! என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியான இச்செய்தியின் மொழி பெயர்ப்புப் பிரகாரம் இஸ்லாமியப் போராளிக் குழுவான ISIL இம்முடிவை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தமது உரிமைக்காக ஈராக்கிலே தான் இரு மடங்கு பலத்துடன் போராட வேண்டி இருப்பதாகவும் சம்மதம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் சிரிய கிளர்ச்சியாளர்களின் நுஸ்ரா குழுவுக்கு எதிராக அரச படைகளுடன் இணைந்து ISIL போராளிகள் சிவில் யுத்தத்துக்குள் நுழைந்தனர்.

இந்நிலையில் 2011 ஏப்பிரலில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப் பட்ட பின் அல் கொய்தாவின் தலைவனாக அவ்வியக்கத்தை வழிநடத்தி வரும் ஷவாஹ்ரி ISIL தலைவன் அபூபக்கர் அல் பக்டாடி சிரியாவில் இருந்து உடனே விடைபெற வேண்டும் என்றும் எமது உறுதியான இலக்கு சிரியாவில் உள்ள அனைத்து சுன்னி இஸ்லாமியக் குழுக்களுமே என அறிவுறுத்தியுள்ளான்.

0 Responses to சிரியாவில் இயங்கி வரும் தமது கிளை சொந்த நாட்டில் சண்டையிடத் திரும்ப வேண்டும்!: அல்கொய்தா தலைவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com