Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அர்த்தமுள்ள செயற்பாட்டுக்காக தமது ஆற்றலையும் சக்தியையும் பயன்படுத்துவது தொடர்பாக சிறந்த புரிந்துணர்வை இளைஞர்களுக்கு வழங்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுடைய புதிய உற்பத்திகளையும், புத்தாக்கங்களையும், புதிய அறிவை ஆராய்வதற்கும், எதிர்கால உலகத்தைத் தயார்படுத்துவதற்கும் மிக முக்கியமானதாக அமைகின்றது. தொழில் முயற்சியுள்ள இளைஞர்கள் பசுமை, சக்தி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வாணிபம் என்பவற்றிற்கு செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்ய முடியும். வெற்றியின் இனிமையானதும் கசப்பானதுமான பயன்களைப் பெற்றுக்கொள்வதைப் போன்று தற்காலத்தில் தவறுகளையும் விளைவுகளையும் தாங்கிக்கொள்வதற்கு இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் சர்வதேச இளைஞர் மாநாட்டை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் இளைஞர்கள் வெறுமனே சேவைகளை அனுபவிப்பவர்கள் அல்ல. தமது மக்களின் எதிர்காலத்தை உருவாக்குகின்ற செயலூக்கமுள்ள பங்கேற்பாளர்களாக அடையாளம் காண்பதற்காக வழியமையும். ஆகவே, தலைவர்கள் என்ற வகையில் நாம் எதிர்காலத்தை வடிவமைக்கின்றபோது அவர்களை சரியான முறையில் கடமையை நிறைவேற்றுவதற்கு இளைஞர் சமுதாயத்துக்கு அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அர்த்தமுள்ள செயற்பாட்டின் பக்கம் இளைஞர்களை திருப்ப வேண்டும்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com