Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது என்று நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தமது தீர்ப்பில் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விவரம் தற்போது வெளியுலகத்துக்கு தெரிய வந்துள்ளது. குன்ஹா தமது தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு விதித்துள்ள தீர்ப்பு என்பது குற்றத்தின் தீவிரம் கருதியும், சொத்துக்கள் எந்தவிதத்தில் எப்படி சேர்க்கப்பட்டன என்பதை கருத்தில் கொண்டும், கடுமையான தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடுவதற்கு முன், அவர்கள் தரப்பு கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும், குறிப்பிட்ட 6 நிறுவனங்கள் ஜெயலலிதாவுக்காக ஜெயலலிதா சார்பில் பதிவு செய்யப்பட்டவை என்று உறுதியாகியுள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார். எனவே, சொத்துக்களைப் பறிமுதல் செய்ய குற்றவாளிகள் தரப்புக் கருத்துக்களைக் கூற, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கத் தேவையில்லை என்றும் தீர்ப்பில் குன்ஹா குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஜெயலிதாவின் குற்றத்துக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரைத் தண்டனை விதிக்கலாம் என்று சட்டத்தில் இடமுள்ளதால், அதில் பாதிக்கு மேற்பட்ட தண்டனையாவது விதிக்க வேண்டும் என்றுதான் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.

குற்றவாளிகளின் தங்களது வங்கிக் கணக்கில் முடக்கப்பட்டு உள்ள தொகையை தங்களது அபராதத் தொகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், போறாத பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம் நகைகளை ரிசர்வ் வங்கியிடம் விற்றோ அல்லது பொதுத்துறை வங்கிகள் மூலம் ஏலம் விட்டோ அபராதத் தொகையை செலுத்தலாம் என்றும் நீதிபதி மைக்கேல் குன்ஹா தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜெயலலிதாவுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது: குன்ஹா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com