Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் 50க்கும் அதிகமானோர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்றைக்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு பாரிய பிரச்சினைகள் உள்ளன. தேர்தல் தொடர்பில் அறிவித்ததும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பலர் எம்முடன் இணைந்து கொள்வதற்கு தயாராக உள்ளனர்.

பாராளுமன்றத்தில் எமக்கு நடந்துசெல்ல முடியாதுள்ளது. ஒவ்வொரு அடிக்கும் 10 பேர் இருப்பார்கள். இன்னுமொரு அடி செல்லும் போது 15 பேர் இருப்பார்கள். இன்னுமொரு அடி செல்லும் போது 25 பேர் இருப்பார்கள். நாளை கலந்துரையாடி 15 பேரை எமது பக்கம் எடுக்க முடியும்.

இவ்வாறானதொரு நிலைமை தான் பாராளுமன்றத்தில் காணப்படுகின்றது. எந்தப் பக்கம் சிக்கும் என்று எங்களால் கூற முடியாது” என்றுள்ளார்.

0 Responses to ஐம்பதுக்கும் அதிகமான அரசாங்க உறுப்பினர்கள் எதிர்க்கட்சியோடு இணையத் தயார்: லக்ஷ்மன் கிரியெல்ல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com