Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடமாகாணசபை நிர்வாகம் தனித்து தன்னிச்சையாக செயற்படுவதான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கட்சியின் அவசர கூட்டம் இன்று யாழில் நடைபெற்றுள்ளது. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனது காரியாலத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்தனர்.

காலை முதல் ஆரம்பமாகி நீண்ட நேரம் நீடித்த இக்கூட்டத்தில் வடமாகாணசபை நிர்வாகம் கட்சி தலைமையினை மீறி தனித்து தன்னிச்சையாக செயற்படுவதான குற்றச்சாட்டு கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட தரப்புக்களினால் எழுப்பப்பட்டிருந்தது. மாகாணசபை அமர்வுகளில் முன் வைக்கப்பட்ட பிரேரணைகள் மற்றும் மத்திய அரசுடனான ஏட்டிக்குப்போட்டியான பிரேரணைகள் என்பவை தொடர்பிலேயே நீண்ட நேரம் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன.

மாகாணசபையினது செயற்பாடுகள் மக்களது எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டிருந்தது. மாகாணசபை உறுப்பினர்களிற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் உரியவகையில் பயன்படுத்தப்படாமை தொடர்பிலும் விமர்சனங்கள் சரமாரியாக முன்வைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இதனிடையே எதிர்வரும் 11,12,13 ம் திகதிகள் ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள நிலையில் அவர் பங்கெடுக்கும் நிகழ்வுகளில் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கெடுப்பதா இல்லையா என்பது பற்றி ஆராயப்பட்டவேளை கட்சி தலைவர் சம்பந்தன் இது தொடர்பாக முடிவெடுத்து அறிவிப்பாரென கூறப்பட்டது.

அதே போல் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தில் பங்கெடுப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது அவர்கள் சார்ந்த கட்சி தலைமைகளே அம்முடிவை எடுக்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to வடமாகாணசபையின் எதிர்காலம்! கூட்டமைப்பு அவசர கூட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com