பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ், அமெரிக்காவின் நியூயோர்க்கில் வைத்து வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்த்தனவினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஏதும் அரசாங்கத்தினால் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69வது அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்ற இலங்கைக் குழுவுக்கு, அமெரிக்காவில் தங்கியுள்ள டிலான் ஆரியவன்சவின் இல்லத்தில் இரவு போசனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போதே, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கிறிஸ் நோனிஸ் தனது இராஜினாமா கடிதத்தை வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளதாக செய்திகள் வெளியான போதிலும், அதனை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

0 Responses to பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் மீதான தாக்குதல்; அரச விசாரணைகள் இன்னமும் இல்லை!