Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களையும், முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டாலும் வடக்கு மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலையில் மீன் விற்பனை நிலையமொன்றை நேற்று புதன்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாணத்துக்கு பெருமளவு நிதியை ஒதுக்கி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றார். அதிலும் கடற்றொழில் நீரியல் வளத்துறைக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளார். இருந்தும் அபிவிருத்தி பணிகளை எவ்வளவு முன்னெடுத்தாலும் வடக்கு மக்களின் மனங்களை வெல்ல முடியாது. அது எமக்கு நன்றாகவே தெரியும்.

வடக்கு மாகாண சபை எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. இருந்தும் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் சென்றது. இருந்தும் எவ்வித கட்சி பேதமின்றி இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் முன்னேற்ற பணிகளை முன்னெடுக்க வேண்டும்” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மக்களின் மனங்களை அரசாங்கத்தினால் வெல்ல முடியாது: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com