ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி (ஜனவரி 08, 2015) நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் என்றும் தேர்தல்கள் திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7வது ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த வியாழக்கிழமை வெளியானது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் கைச்சாத்திட்டார். மற்றொரு பதவிக்காலத்துக்காக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்ற பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டதையடுத்து அந்த பிரகடனம் தொலைநகல் ஊடாக தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதியை நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கவிருப்பதாக தேர்தல்கள் செயலகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
1988ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் திருத்த சட்டத்தின் பிரகாரம் வர்த்தமானியில் கைச்சாத்திட்ட நாளிலிருந்து வேட்பு மனுத்தாக்கல் 16 அல்லது 21 நாட்களுக்கு கோரப்படும் என்பதுடன் தேர்தல் 28 நாட்களிலிருந்து 42 நாட்களுக்கு உட்பட்ட நாளொன்றில் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்தது.

0 Responses to ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 08ஆம் திகதி: வேட்புமனுக் கோரல் டிசம்பர் 08ஆம் திகதி!