Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிரணியின் பொது வேட்பாளராக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்து ஆறுதலாகவே முடிவெடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், எதிரணியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிடவுள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கேள்வியெழுப்பப்பட்ட போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் பார்த்ததாக கூறிய இரா.சம்பந்தன், “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக அவர் கூறிய சில அம்சங்களை வரவேற்ற போதிலும் அவை குறித்தும், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்தும் தமது கட்சி ஆராய்ந்தே முடிவெடுக்கும்” என்றார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் அவசரமான முடிவில்லை: கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com