விடுதலையாகி வீடு திரும்பினாலும், சட்டத்தின் படி நாங்கள் இன்னும் குற்றவாளிகளாகத்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறோம். எனவே இனி நாங்கள் எங்கே சென்றாலும் குற்றவாளிகளாகவே பார்க்கப்படும் நிலை உள்ளது. இவ்வாறு இலங்கைச் சிறையிலிருந்து விடுதலையான 5 மீனவர்களில் ஒருவரான பிரசாத் தெரிவித்தார்.
இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 இராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிபர் ராஜபக்ச பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார்.
இந்நிலையில், மீனவர்கள் விடுவிக்கப்படதற்கு தாங்கள்தான் காரணம் என ஒரு புறம் அ.தி.மு.க. தரப்பும் மறுபுறம் நாங்கள்தான் என்று மத்தியில் ஆளும் பி.ஜே.பி. தரப்பும் அறிக்கைகள் விட்டு கொண்டிருந்தனர்.
மீனவர்களின் சொந்த ஊரான தங்கச்சிமடத்திற்கு அவர்கள் அனைவரும் வரும் வரை ஆட்சியாளர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. அன்று நடந்த விழாவிலும் இது அப்பட்டமாக வெளிப்பட்டது.
இந்நிலையில், தூக்கில் இருந்து தப்பிய மீனவர்களில் ஒருவரான பிரசாத் நம்மிடம் கூறும்போது,
கடல் தாயின் மடியில் பிறந்த எங்களுக்கு வேறு தொழில் செய்ய தெரியாது. எனவே, எங்களுக்கு தெரிந்த தொழிலான மீன்பிடி தொழிலை பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் விரும்பி செய்து வந்தோம். இந்த சூழலில்தான் மீன்பிடிக்க சென்ற எங்களை, போதை பொருள் கடத்தி வந்த கடத்தல்காரர்களாக சித்தரித்து சிறையில் அடைத்தனர்.
கட்டிய மனைவி, பெற்ற குழந்தை, பிறந்தும் முகம் காண முடியாத பிள்ளை என எல்லோரையும் தவிக்கவிட்டு 3 ஆண்டுகளாக நடை பிணங்களாகத்தான் சிறையில் இருந்து வந்தோம். என்றாவது ஒரு நாள் நிச்சயம் விடுதலையாகி விடலாம் என்ற நம்பிக்கையில் உயிர் வாழ்ந்த நாங்கள், கடந்த 30 ஆம் தேதி அதே நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்கு சென்றோம்.
நீதிபதி எங்களை சிறையில் இருந்து விடுவிப்பார் என எண்ணியிருந்த நிலையில், இந்த உலகில் இருந்தே விடுவிக்க கூடிய மரண தண்டனையை தீர்ப்பாக சொன்னார். தண்டனை அறிவிக்கப்பட்ட கணமே செத்துவிட வேண்டும் என்ற விரக்தி உண்டாச்சு. அந்த எண்ணத்துடனே இருந்த எங்களை, வெலிக்கடை சிறையில் உள்ள தூக்கு தண்டனை கைதிகளூக்கான தனி சிறையில் அடைத்தனர்.
கடந்த 3 ஆண்டுகளில் சில நாட்கள் அயர்ந்து தூங்கியிருக்கிறோம். ஆனால், மரண தண்டனை அறிவிக்கப்பட்ட இரவில் தூங்க முடியாமல் தவித்த வேதனை என் வாழ்நாளில் இனி யாருக்கும் ஏற்பட கூடாது. மறுநாள் காலை இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை சந்திக்க வரும் வரை நாங்கள் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
அவர்கள் அப்பீல் வழக்கில் விடுதலையாக சொன்ன பின்தான் இயல்பு நிலைக்கு திரும்பினோம். அவர்களின் கைகளில் எங்கள் உயிர்களை ஒப்படைத்துவிட்டு முடிவுக்காக காத்திருந்தோம். அதன்பின் 19 ஆம் தேதி மாலை பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டோம்.
விடுதலையாகி வீடு திரும்பினாலும், சட்டத்தின் படி நாங்கள் இன்னும் குற்றவாளிகளாகத்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறோம். எனவே இனி நாங்கள் எங்கே சென்றாலும் குற்றவாளிகளாகவே பார்க்கப்படும் நிலை உள்ளது. இதனால், கடல் தொழிலுக்கும் செல்ல முடியாது.
வெளி இடங்களுக்கோ, வெளிநாட்டிற்கோ வேலை தேடி செல்லவும் முடியாது. அதனால் எங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதுடன் நாங்கள் நிரபராதிகள் என அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்" என்றார்.
பிரசாத்தின் மனைவி ஸ்கெனிட்டா கூறும்போது,
கடந்த 3 வருஷமா வெளியில் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவிச்சு வந்தேன். எந்த பொண்ணும் தன்னோட பிரசவத்தின் போது தனது கணவர் அருகிலே இருக்கனும்னு நினைப்பா. எனக்கோ பிரசவத்தின் போது மட்டுமல்ல என் மகன் வளர்ந்த பின்னரும்கூட அவனோட அப்பா முகத்தை பாக்க முடியாத நிலை இருந்துச்சு. எங்க முதல் குழந்தையோட முதல் பிறந்தநாளை கொண்டாடிட்டு கடலுக்கு போனவர் 3 வருஷம் கழிச்சு வந்திருக்காரு.
இந்த இடைப்பட்ட காலத்தில அப்பாவோட முகத்தை குழந்தைகள் மறந்துடக் கூடாது, அவர் மீது அன்பு குறைஞ்சிட கூடாது என்பதுக்காக என் கணவரோட போட்டோவை காட்டி, அந்த போட்டோவோட குழந்தைகளை பேச வச்சு காலத்தை கடத்துனேன். பெத்த பிள்ளைங்களே தங்களோட அப்பாவை புதிய ஆளா பாத்து, அவர் கிட்ட போக மறுத்து அடம்பிடிச்சது எந்த தந்தைக்கும் ஏற்பட கூடாத சோகம்.
இன்னொரு முறை மீன்பிடிக்க சென்று இது போல ஒரு சம்பவம் நடந்தால் எங்களால் அதனை தாங்கி கொள்ள முடியாது. எனவே இனி கடலுக்கு செல்லாமல் வேறு தொழிலுக்குதான் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு அரசும் எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார்.
''பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும்" என சொல்வார்கள். இந்த முதுமொழியின் சாட்சியாக உள்ளது மீனவர் எமர்சனின் வாழ்க்கை. 5 சகோதரர்கள் கொண்ட கூட்டு குடும்பத்தில் எமர்சன் மூத்தவர். தனது தம்பி கிளாடுவினின் பெயரில் உள்ள படகில் மீன்பிடிக்க சென்றவர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்பட்டார்.
வழக்கமான சிறை பிடிப்பு நிகழ்வுதான் இது. விரைவில் விடுவித்து விடுவார்கள் என எண்ணினார் எமர்சன். அதனால், இலங்கை கடற்படையினர் கொடுத்த தாக்குதலை எல்லாம் தாங்கி கொண்டார். ஆனால், இரு நாட்களுக்கு பின் போதை பொருள் கடத்தி வந்ததாக பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைத்ததை இளகிய மனம் கொண்ட எமர்சனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனால் சிறையில் இருந்த போது மன இருக்கத்திற்கு ஆளானவரை உடன் இருந்த சக மீனவர்கள் இடைவிடாது பேச்சு கொடுத்தபடியே இருந்ததால் ஓரளவு அதில் இருந்து விடுபட்டிருக்கிறார்.
இதனிடையே எமர்சனின் உடன் பிறந்த கடைசி தம்பி, சென்னையில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். அவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ரயிலில் அடிபட்டு இறந்து போனார். இந்த தகவல் சிறையில் இருக்கும் எமர்சனுக்கு தெரிந்தால் அவர் மேலும் பாதிக்கப்படுவார் என கருதிய குடும்பத்தினர் அந்த சோகத்தினை இன்று வரை அவரிடம் சொல்லாமலேயே இருந்து வருகின்றனர்.
இந்த சூழலில் வீடு திரும்பியுள்ள எமர்சன், ''நாங்க மீன் பிடிக்க தானே போனோம். ஏன் எங்கள பிடிச்சு அடிச்சாங்க. சிறையில அடைச்சாங்க. எங்க படகை ஏன் பறிச்சுகிட்டாங்க. உழைச்சு பிழைக்க நினைக்குறது குத்தமா?" என வீட்டுக்கு வரும் உறவினர்களிடமும், மீடியாகாரர்களிடமும் கேட்டபடியே இருக்கிறார்.
25 லட்சம் மதிப்புள்ள படகையும், வாழ்க்கையின் நிம்மதியையும் இழந்து தவிக்கும் எமர்சனுக்கு இரு குழந்தைகள். அதில் ஒன்று எமர்சன் சிறையிலிருக்கும்போது பிறந்தது. பிறந்து 33 மாதங்களுக்கு பின் தந்தையின் முகத்தை காணும் குழந்தையை, முழுமையாக தொட்டு தூக்கி அரவணைக்க முடியாத நிலையில் இருக்கும் எமர்சனின் நிலை எந்த தந்தைக்கும் நேர கூடாது என்பதே எல்லாருடைய வேண்டுதலாக இருக்கிறது.
வீட்டின் ஒரே ஆண் வாரிசான லாங்லெட், குடும்ப பாரத்தை சுமக்கும் தந்தைக்கு உதவ மீன் பிடி தொழிலுக்கு சென்றார். 10 ஆம் வகுப்பு படித்து முடித்த லாங்லெட் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டபோது 2வது தடவையாகத்தான் கடலுக்கு சென்றிருக்கிறார்.
மீன்பிடி தொழிலின் நுணுக்கங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் முன்னமே இலங்கை கடற்படையினரிடம் சிக்கி 35 மாத சிறை தண்டனையை அனுபவித்திருக்கிறார். இந்த இளம் வயதில் தூக்கு கயிற்றின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்திருக்கிறார்.
அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் விலகாதவராக நம்மிடம் பேசிய லாங்லெட், ''இலங்கை கடற்படை எங்களை பிடித்து சென்றபோது மற்றவர்களைவிட எனக்கு அதிக பயமாக இருந்தது. எங்க உறவுகாரங்க மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரிடம் சிக்கி அவர்களிடம் வாங்கும் அடிகளை கேள்விப்பட்டிருக்கிறேன்.
கடலுக்கு சென்ற 2வது நாளிலேயே இந்த கொடுமையை நான் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுருச்சு. குடும்ப கஷ்டத்தை சமாளிக்க மீன்பிடிக்க போன எனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையால என் குடும்பத்தை நிரந்தரமா இழந்துருவோனோங்கிற பயம் ஏற்பட்டுருச்சு.
என் கூட இருந்தவங்க எனக்கு தைரியதையும் நம்பிக்கையையும் கொடுத்தாங்க. சாட்சி, தடயம் ஏதும் இல்லாமலே எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்துட்டாங்க. இந்த தண்டனை இனி கடல் தொழிலுக்கு போக கூடாதுங்கிற மனநிலையை உருவாக்கிருச்சு.
வேறு வழியில்லாம மீன்பிடிக்க போய், அப்போது ஏற்படும் இயற்கை சீற்றங்களின் விளைவால் இலங்கை கடற்படையினரிடம் சிக்கும் நிலை வந்தால் நிச்சயம் நான் ஊர் திரும்ப முடியாது. ஏனெனில் எங்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர நிரபராதிகள் என சொல்லப்படவில்லை.
அதனால் மத்திய, மாநில அரசுகள் நாங்கள் நிரபராதிகள் என உறுதி படுத்த வேண்டும். அதுவே எங்களுக்கு கிடைத்த முழுமையான விடுதலையாக இருக்கும். மேலும், கடல் தொழிலையே நம்பியிருக்கும் எங்களுக்கு நிம்மதியான தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும். இலங்கை கடற்படையினரின் பொய் வழக்குகளில் இருந்து எங்கள் மீனவர்களை மீட்க நிரந்தர தீர்வினை காண வேண்டும்" என்றார்.
தூக்குத் தண்டனையில் இருந்து மீண்டிருக்கும் மீனவர்கள் அகஸ்டஸ், வில்சன் ஆகிய இருவரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து விட்டாலும், இலங்கை சிறையில் கழித்த கொடுமையான நினைவுகளும், தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டபோது தங்கள் குடும்பங்களை நினைத்து பட்ட துயரங்களும் தங்களை இன்னும் நிம்மதியாக உறங்க விடவில்லை என்றனர்.

0 Responses to விடுதலையானாலும் இன்னும் நாங்கள் குற்றவாளிகளாகத்தான்: 5 மீனவர்கள் வேதனை!